<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.56-61 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 21.56-61

# Maṇimēkalai's Renunciation 21.56-61

Maṇimēkalai 21.56-61

- **Language:** Tamil

### [21.56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.56)

மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை  
சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு  
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்  
தோளும் தலையும் துணிந்து வேறாக  
வாளின் தப்பிய வல் வினை அன்றே

### [21.61](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.61)

விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு  
இராகுலன் தன்னை இட்டு அகலாதது  
"தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய  
அவல வெவ் வினை" என்போர் அறியார்  
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.8) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.56-61](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.56-61) · Pramāṇa
