<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.61-66 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 22.61-66

# Maṇimēkalai's Renunciation 22.61-66

Maṇimēkalai 22.61-66

- **Language:** Tamil

### [22.61](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.61)

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!  
பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு  
விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி  
கடவுள் பேணல் கடவியை ஆகலின்  
மடவரல்! ஏவ மழையும் பெய்யாது

### [22.66](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.66)

நிறை உடைப் பெண்டிர் தம்மே போல  
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை  
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை!  
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது  
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.11) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.61-66](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.61-66) · Pramāṇa
