<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.96-101 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 25.96-101

# Maṇimēkalai's Renunciation 25.96-101

Maṇimēkalai 25.96-101

- **Language:** Tamil

### [25.96](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.96)

அணி மணி நீள் முடி அரசன் கூற  
'மனம் வேறு ஆயினன் மன்' என மந்திரி  
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி  
'எம் கோ வாழி! என் சொல் கேண்மதி  
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்

### [25.101](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.101)

பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு  
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு  
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி  
தான் தனி தின்னும் தகைமையது ஆயது  
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.13) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.96-101](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.96-101) · Pramāṇa
