<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.26.1-6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 26.1-6

# Maṇimēkalai's Renunciation 26.1-6

Maṇimēkalai 26.1-6

- **Language:** Tamil

### [26.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.26.1)

அணி இழை அந்தரம் ஆறா எழுந்து  
தணியாக் காதல் தாய் கண்ணகியையும்  
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்  
கடவுள் எழுதிய படிமம் காணிய  
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து

### [26.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.26.6)

வணங்கி நின்று குணம் பல ஏத்தி  
'அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது  
கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது  
அருளல் வேண்டும்' என்று அழுது முன் நிற்ப  
ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.27.1) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.26.1-6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.26.1-6) · Pramāṇa
