<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.16-21 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 27.16-21

# Maṇimēkalai's Renunciation 27.16-21

Maṇimēkalai 27.16-21

- **Language:** Tamil

### [27.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.16)

நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்  
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன  
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று  
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து  
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி

### [27.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.21)

பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி  
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது  
கிட்டிய தேசம் நாமம் சாதி  
குணம் கிரியையின் அறிவது ஆகும்  
கருத்து அளவு ஆவது

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.4) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.16-21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.16-21) · Pramāṇa
