<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.81-86 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 28.81-86

# Maṇimēkalai's Renunciation 28.81-86

Maṇimēkalai 28.81-86

- **Language:** Tamil

### [28.81](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.81)

அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு  
இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும்  
சாவக மன்னன் தன் நாடு எய்த  
தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும்  
புக்க பின் அந்தப் பொய் உருவுடனே

### [28.86](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.86)

தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்  
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்  
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்  
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி  
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.29.12) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.81-86](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.81-86) · Pramāṇa
