<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.46-51 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 3.46-51

# Maṇimēkalai's Renunciation 3.46-51

Maṇimēkalai 3.46-51

- **Language:** Tamil

### [3.46](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.46)

உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்  
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்  
மண்ணவர் விழையார் வானவர் அல்லது  
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்  
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்

### [3.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.51)

"கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்" என்று  
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்  
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த  
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்  
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.10) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.46-51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.46-51) · Pramāṇa
