<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.1-6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 5.1-6

# Maṇimēkalai's Renunciation 5.1-6

Maṇimēkalai 5.1-6

- **Language:** Tamil

### [5.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.1)

இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி  
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப  
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து  
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்  
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து

### [5.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.6)

உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப  
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்  
காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து  
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்  
சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.1) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.1-6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.1-6) · Pramāṇa
