<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.1-6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 6.1-6

# Maṇimēkalai's Renunciation 6.1-6

Maṇimēkalai 6.1-6

- **Language:** Tamil

### [6.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.1)

அந்தி மாலை நீங்கிய பின்னர்  
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்  
சான்றோர் தம் கண் எய்திய குற்றம்  
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல  
மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர

### [6.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.6)

ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்  
வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்  
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய  
உருவு கொண்ட மின்னே போல  
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.1) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.1-6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.1-6) · Pramāṇa
