<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.111-116 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 6.111-116

# Maṇimēkalai's Renunciation 6.111-116

Maṇimēkalai 6.111-116

- **Language:** Tamil

### [6.111](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.111)

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்  
கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு  
நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்  
கடகம் செறித்த கையைத் தீநாய்  
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்

### [6.116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.116)

சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை  
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்  
பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து  
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்  
கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.19) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.111-116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.111-116) · Pramāṇa
