<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.136-141 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 6.136-141

# Maṇimēkalai's Renunciation 6.136-141

Maṇimēkalai 6.136-141

- **Language:** Tamil

### [6.136](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.136)

துறையும் மன்றமும் தொல் வலி மரனும்  
உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய்  
தகவு இலைகொல்லோ சம்பாபதி!" என  
மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ  
ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில்

### [6.141](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.141)

கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற  
"கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி  
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை  
என் உற்றனையோ? எனக்கு உரை" என்றே  
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.24) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.136-141](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.136-141) · Pramāṇa
