<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.26-31 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 6.26-31

# Maṇimēkalai's Renunciation 6.26-31

Maṇimēkalai 6.26-31

- **Language:** Tamil

### [6.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.26)

அங்கு நீர் போம்' என்று அருந் தெய்வம் உரைப்ப  
'வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்  
அம் செஞ் சாயல் நீயும் அல்லது  
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்  
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்

### [6.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.31)

சக்கரவாளக் கோட்டம் அஃது என  
மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்  
ஈங்கு இதன் காரணம் என்னையோ?' என  
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்  
'மாதவி மகளொடு வல் இருள் வரினும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.5) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.26-31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.26-31) · Pramāṇa
