<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.9.31-36 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 9.31-36

# Maṇimēkalai's Renunciation 9.31-36

Maṇimēkalai 9.31-36

- **Language:** Tamil

### [9.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.9.31)

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத்  
தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்  
மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை  
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்  
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய

### [9.36](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.9.36)

அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து  
உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள்  
அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும்  
இரவிவன்மன் ஒரு பெருந்தேவி  
அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.10.5) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.9.31-36](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.9.31-36) · Pramāṇa
