Pramāṇa · Search · About · API

Parandappadi p169

Parandappaḍi p169

Language
Sanskrit

p169

லிற்று; அதுக்குப் பூர்வபாவிதாய்ப் ப்ரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாயிருக்கிற பலவிஶேஷம் அங்கு அநுக்தமாகை யாலே தாத்ருஶமான பலவிஶேஷம் இவ்வதிகாரிக்கு அதிகமாகையாலும் இங்குச் சொல்லிற்று. இவனுக்கு அபிலஷிதமாய் பகவத்நுபவாதிரூபமாயிருக்கிற ப்ரதாந பலம் - திரோஹிதங்களாயிருக்கிற மணித்யுமணீதீபாதிக ளினுடைய ப்ரகாஶாதிகளைப்போலே ஸ்வதஸ்ஸித்த மாய் ப்ரதிபந்தக நிவ்ருத்திமாத்ரஸாகாங்க்ஷமாயிருக்கை யாலே, நிவ்ருத்தப்ரதிபந்தகனான இவனுக்கு ஸ்வத ஏவ ஆவிர்ப்பாவமாயிருப்பதொன்றாகையாலே தனித்துச் சொல்லவேண்டாவிறே. a "வழித்தங்கு வல்வினையை" என் றும், b "கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோருடம்பி லிட்டு" என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தேஹஸம்பந்தப்ரமுகமான ப்ரதிபந்தகவர்க்கம் ஔபா திகமாயிறேயிருப்பது ; ஆகையாலே, வந்தேறியான விரோதி கழிந்தால் தன்னடையே வருகையாலே சொல்லிற்றில்லை.