Pramāṇa · Search · About · API

சிவஞானபோதம 2.22: வார்த்திகப் பொழிப்பு: — கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று

சிவஞானபோதம் 2.22

Language
Tamil

2.22

முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என்றது.
ஏது: மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம்:
அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம்
அன்னியமிலான் அசத்தைக் காண்குவனேல்---- அன்னியமாக்
காணான் அவன்முன், கதிர்முன் இருள்போல்
மாணா அசத்து இன்மை மற்று.