Pramāṇa · Search · About · API

சிவஞானபோதம 2.25: என்பது சூத்திரம் — வார்த்திகப் பொழிப்பு

சிவஞானபோதம் 2.25

Language
Tamil

2.25

முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் ஞானம் நிகழும் என்றது
ஏது: மேற் சரியை கிரியா யோகங்களை செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக்கொடா ஆகலான்.
உதாரணம்:
தவம்செய்வார் என்றும் தவலோகம் சார்ந்து
பவஞ் செய்து பற்று அறுப்பார் ஆகத் -- தவஞ் செய்த
நற்சார்பில் வந்து உதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு.
பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம் -- இசைத்த
இருவினை ஒப்பில் இறப்பில் தவத்தான்
மருவுவன் ஆம் ஞானத்தை வந்து. 46