Pramāṇa · Search · About · API

சிவஞானபோதம 2.29: வார்த்திகப் பொழிப்பு — கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று

சிவஞானபோதம் 2.29

Language
Tamil

2.29

முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, அம்முதலை ஞானக் கண்ணினாலேயே காண்க என்றது.
ஏது: அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான்.
உதாரணம்:
நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ
தேடி எனையறியேன் தேர்ந்தவகை -- நாடி அரன்
தன்னாலே தனையும் கண்டு தமைக்காணார்
என்னாம் என அறிவார் இன்று. 54
காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக்
காட்டாய உள்ளத்தைக் கண் காணா -- காட்டிய
உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான் உள்ளத்திற் காண்.