சிவஞானபோதம 2.34: என்பது சூத்திரம் — வார்த்திகப் பொழிப்பு
சிவஞானபோதம் 2.34
- Language
- Tamil
2.34
முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது
ஏது: இவ்வான்மாக்கள் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான்
உதாரணம்:
ஐந்தையும் ஒக்க உணராது அவற்றுணர்வது
ஐந்தும்போல் நின்றுணரும் ஆகலான் -- ஐந்தினையும்
ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே எவ்வுலகும்
ஒன்றொன்றாப் பார்க்கும் உணர்ந்து. 68
ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப்
போகமாய்த் தான் விளைந்த பொற்பினால் - ஏகமாய்
உள்ளத்தின் கண்ணானான் உள்குவார் உள்கிற்றை
உள்ளத்தாற் காணானோ உற்று. 69