சிவஞானபோதம 2.4: வார்த்திகப் பொழிப்பு — கருத்துரை: என் நுதலிற்றோவெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
சிவஞானபோதம் 2.4
- Language
- Tamil
2.4
முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது.
ஏது: அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில், ஏகம் என்று சுட்டுவது உண்மையின் அத்துவிதம் என்றசொல்லே அந்நிய
நாத்தியை உணர்த்துமாயிட்டு.
உதாரணம்.
கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம்
இட்டதொரு பேர் அழைக்க என் என்றாங்கு-- ஒட்டி
அவன் உளம் ஆகில்லான் உளம் அவன் ஆ மாட்டாது
அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு. 6
ஒன்று என்றது ஒன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்
ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைக் காண்--- ஒன்று இன்றால்
அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல்
இக்கிரமத்து என்னும் இருக்கு. 7
பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்-- அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு. 8
அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கற்போல்
உருக்கி உடங்கு இயைந்து நின்று--- பிரிப்பு இன்றித்
தாமே உலகாம் தமியேன் உளம் புகுதல்
யானே உலகு என்பன்இன்று.