Pramāṇa · Search · About · API

சிவஞானபோதம 2.8: வார்த்திகப் பொழிப்பு — கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று.

சிவஞானபோதம் 2.8

Language
Tamil

2.8

முதல் அதிகரணம்.
மேற்கோளும் ஏதுவும்: ஈண்டு , இலது என்றலின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: எவற்றினையும் அன்று அன்று எனவிட்டு, ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின் அதுவேஅவ் வான்மாவாம்
என்றது.
உதாரணம்:
அன்று அன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய்
நின்றஒன்று உளதுஅதுவே நீ அனைத்தும்-- நின்றுஇன்று
தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீயல்லை
தற்பரமும் அல்லை தனி. 16