Pramāṇa · Search · About · API

Purananuru 14.p8

Puṟanāṉūṟu paḻaiya urai 14.p8

Language
Tamil

14.p8

(இ - ள்.) வன்கண்மையை உடையகொலையானையாலே காவலை யுடைய ²கணையமரத்தைமுறித்து இரும்பாற் செய்யப்பட்ட அழகுசெய்த அங்குசத்தால்முன்னர்க் கடாவி அதுசெய்யும் வினையைப் பின்வேண்டுமளவிலே பிடிக்கவும், வலிய நிலத்தைக்குந்தாலியால் இடித்துச்செய்த குழிந்த கிடங்கின்கண்நீர்ப்பரப்பினது ஆழமாகிய உயர்ச்சியைக் கருதிஅதன்கட் செல்லாமல் மிகைத்த செலவினையுடைய குதிரையைக்குசை தாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும், அம்பறாத்தூணிபொருந்தியமுதுகையுடையையாய்த் தேர்மேலே நின்று வில்லினது வலியநாணாற்பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச் செலுத்தவும்,பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களைஅளிக்கவும், தலைவ! வலியவாகும் நின் முழந்தாளைப்பொருந்திய பெரிய கைகள் ; புலானாற்றத்தை யுடையவாகியசெவ்வித்தடியைப் பூநாற்றத்தவாகிய புகையைக் கொளுத்திஅமைத்த ஊனையும் துவையையும் கறியையும் சோற்றையும்உண்டு வருந்துஞ் செயலல்லது வேறு செயலறியா வாகலான்,அவைதாம் பெரிதும் மெல்லியவாயின; பெரும ! பெண்டிர்கட்குஆற்றுதற்கரிய வருத்தமாகிய மார்பினையும் பொருவார்க்குத்துளக்கப்படாமையிற் பெரிய நிலம்போன்ற வலியினையும்உடைய, போரின்கண்ணே மிக்க சேயையொப்பாய்!நின்னைப் பாடுவாருடைய கைகள் - எ - று.