Purananuru 4.p8
Puṟanāṉūṟu paḻaiya urai 4.p8
- Language
- Tamil
4.p8
(இ - ள்.) வாள் வெற்றியைத்தருதலாற் குருதிக்கறைபட்டன, செக்கர் வானத்தினதுஅழகையொத்தன; கால்புடை பெயர்ந்துபோர் செய்துகளத்தைத் தமதாக்கிக்கொள்ளுதலால் வீரக்கழல் ¹அருப்புத்தொழில் பறைந்தவை, கொல்லும் ஆனேற்றினதுகோட்டையொத்தன;பரிசைகள் ஒலித்துத் தைத்த அம்புகளால் துளைதோன்றுவன,நிலையிற் றப்பாத இலக்கத்தையொத்தன; குதிரைகள்எதிரியை எறியும் காலமுடையான் ² இடவாய்வலவாயாகிய இடத்தைக் காட்ட முகக்கருவி பொரப்பட்டசெவ்வாயை உடைமையான் மான்முதலாயினவற்றின் கழுத்தைக்கவ்வி உதிரம் ³ உவற்றியுண்ட புலியை யொத்தன;களிறுகள், கதவை முறித்து வெகுண்டு உலாவி நுனைதேய்ந்தவெளியகோட்டையுடைமையான் உயிரையுண்ணும் கூற்றையொத்தன;நீதான், அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய குதிரையாற்பூட்டப்பட்ட பொற்றேரின்மேலே பொலிவொடு தோன்றுதலாற்கரிய கடலின்கண்ணே ஓங்கியெழுகின்ற செய்யஞாயிற்றினது ஒளியையுடையை; அத்தன்மையையாதலால்,தாயில்லாத உண்ணாக் குழவிபோல ஒழியாது கூப்பிடும்நின்னைச் சினப்பித்தவருடைய நாடு - எ - று.