Purananuru 9.p29
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p29
- Language
- Tamil
9.p29
2. “முந்நீர் - கடல்;ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரெனஇவையென்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர்மேனீராதலானும் இவ்விரண்டு மில்வழி ஊற்றுநீரும்இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல்பொருந்தியதன்று; முதிய நீரெனின், “நெடுங்கடலுந்தன்னீர்மை குன்றும்” (குறள். 17) என்பதனால்அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின்முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச்செய்கை யாவன மண்ணைப் படைத்தலும் மண்ணையழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்” என்பர்அடியார்க்குநல்லார் (சிலப். 17 : முந்நீரின்); பெரும்பாண்.441; சீவக. 5, ந. பார்க்க.