Pramāṇa · Search · About · API

Purananuru 9.p6

Puṟanāṉūṟu paḻaiya urai 9.p6

Language
Tamil

9.p6

(இ - ள்.) ஆவும், ஆனினதியல்பையுடையஅந்தணரும், மகளிரும், நோயுடையீரும், பாதுகாத்துத்தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில்இறந்தோர்க்குச் செய்தற்கரியபிண்டோதகக்கிரியையைப் பண்ணும் பொன்போலும்பிள்ளைகளைப் பெறாதீரும் எம்முடைய அம்பைவிரையச் செலுத்தக்கடவேம், நீர் நுமக்கு அரணாகியஇடத்தை அடையுமென்று அறநெறியைச் சொல்லும்மேற்கோளினையும் அதற்கேற்ற மறத்தினையுமுடைய,கொல்யானைமேலே எடுக்கப்பட்ட கொடிகள்ஆகாயத்தை நிழற்செய்யும் எம்முடைய வேந்தனாகியகுடுமி வாழ்வானாக; தம்முடைய கோவாகிய, சிவந்தநீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் ¹கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடையநெடியோனால் (பி - ம். உயர்ந்தோனால்)உளதாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளியென்னும்ஆற்றின் மணலினும் பலகாலம்-எ - று.