Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 11.12

Maṇimēkalai urai 11.12

Language
Tamil

11.12

மந்திரங் கொடுத்த காதை

65

70
ஆதி முதல்வன் அறவாயி யாள்வோன்
மாதுய ரெவ்வ மக்களை நீக்கி
விலங்குந் தம்முள் வெரூஉம்பகை நீக்கி
உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்துகத்
தொன்றுகா லத்து நின்றற முரைத்த
குன்ற மருங்கிற் குற்றங் கெடுங்கும்
பாத பங்கயங் கிடத்தலின் ஈங்கிது
பாதபங் கயமலை எனும்பெயரத் தாயது்
தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கிப்
பழுதில் காட்சியீர் நீயிருந் தொழுமென

61

உரை

70

ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன்-ஆதிமுதல்வனும் அறமாகிய திகிரியை உருட்டுவோனுமாகிய புத்தன், மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி-மக்கள் பிறப்பு இறப்புகளாகிய மிக்க துன்பத்தினின்றும் நீக்கி, விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி- விலங்குகளையும் தம்முள்ளே அஞ்சுதற்குக் காரணமாகிய பகைமையை நீங்கச் செய்து, உடங்கு உயிர்வாழ்க என்று உள்ளம் கசிந்து உக - எவ்வுயிரும் தம்முள் ஒற்றுமையுடையனவாக வாழ்க என்று அருளினாலே உள்ளம் இரங்கி உருக, தொன்று காலத்து நின்று அறம் உரைத்த-முற்காலத்தில் எல்லா உயிர்களும் காணுமாறு நின்று அறங்கூறிய, குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்பாத பங்கயம் கிடத்தலின் - குன்றத்தின்கண் காமமாதி குற்றங்களை அழிக்கும் திருவடித் தாமரைகள் விளங்கிக் கிடத்தலினால், ஈங்கிது பாதபங்கயமலை எனும் பெயர்த்தாயது - இது பாதபங்கயமலை எனும் பெயரினையுடைத்தாயிற்று,
தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கு - யான் இம்மலையை வலங்கொண்டு வணங்குமாறு ஈண்டு வந்தேன், பழுதில் காட்சியீர் நீயிரும் தொழுமென - குற்றமற்ற அறிவினையுடைய நீவிரும் வணங்குவீராக என்று கூற;

துயர் எவ்வம்: ஒரு பொருட் பன்மொழி. கேட்டோர் உள்ளம் கசிந்து உக என்றுமாம். உரைத்த குன்றமாவது மகததேயத்தின் இராசதானியாகிய இராசக்கிருக நகரின் அருகிலுள்ள கிருத்திரகூடம் என்னும் மலையென்பர். பாதபங்கயம் - புத்தனுடைய பாததாமரை.

Linked texts (1)