Maṇimēkalai's Renunciation 11.6
Maṇimēkalai urai 11.6
- Language
- Tamil
11.6
மந்திரங் கொடுத்த காதை
30
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல்இயல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச
இராகுலன் வந்தோன் யார்என வெகுளலும
28
உரை
31
மயங்கினை கலங்கி மெல்லியல் கண்டனை மெய் நடுங் குற்றனை - மெல்லியலே நீ அவனைக் கண்டு மயங்கிக் கலக்கமுற்று உடல் நடுக்கமடைந்த, நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச- வறுமை யெய்திய இடையினை யுடையையாய் நாணமுற்று வணங்க, இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் - ஈண்டு வந்தவன் யாவன் என இராகுலன் சினங்கொள்ளலும்;
மெலிந்து ஒசிவதனை நல்கூரந்ததென்று உபசரித்தார். கணவன் தன் அடியில் வணங்குழி வந்தனனாகலின் நாணுதலுற்றாளென்க. மயங்குதல் முதலியன இறைபொருளாகப் பிறந்த அச்சமென்னும் மெய்ப்பாடு. இராகுலன் வெகுண்டமை குடிகோள் பற்றி வந்த வெகுளி யென்னும் மெய்ப்பாடு.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil