Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 17.9

Maṇimēkalai urai 17.9

Language
Tamil

17.9

ஆதிரை பிச்சையிட்ட காதை

55

ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்குயர் பிறங்கல் ஒருமர நீழல்
மஞ்சுடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து
துஞ்சுதுயில் கொள்ளஅச் சூர்மலை வாழும்
நக்க சாரணர் நயமிலர் தோன்றிப்
பக்கஞ் சேர்ந்து பரிபுலம் பினனிவன்
தானே தமியன் வந்தனன் அளியன்
ஊனுடை இவ்வுடம் புணவென் றெழுப்பலும்

52

உரை

59

ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒரு மர நீழல்-அவளின் கணவனாகிய சாதுவன் கடற்கரையில் மிக உயர்ந்த மலையின் கண்ணுள்ள ஒரு மர நிழலில், மஞ்சுடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள - முகில்களையுடைய பெரிய கடலின்கண் வருந்திய துன்ப மிகுந்து மிக்க உறக்கத்தினையுடைய, அச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றி - அச்சத்தினைத்தரும் அம் மலையிலுறையும் வன்கணாளராகிய
நக்கசாரணர்கள் ஆண்டுவந்து, பக்கஞ்சேர்ந்து - சாதுவன் மருங்கடைந்து, பரி புலம்பினன் இவன் - இவன் மிகவும் வருந்தியுள்ளான், தானே தமியன் வந்தனன்-தான் ஒருவனேயாய் ஈண்டு வந்தனன், அளியன் - எளிமையுடையன், ஊனுடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும் - புலால் பொதிந்த இவனுடம்பு நமக்கு உணவாகும் என்று எழுப்புதலும் ;

அலைநீர் - கடல். துஞ்சு துயில்-மிக்க துயில். நக்க சாரணராகிய நாகர் என்க. நயமிலர் - இனிமையில்லாதவர் ; வன்கண்மை யுடையர், பரிபுலம்பு - மிக்க வருத்தம்; ¹'பக்க நீங்குமின் பரிபுலம் பினரென', என்பது காண்க.

¹ சிலப். 10 : 266.

Linked texts (1)