Maṇimēkalai's Renunciation 28.37
Maṇimēkalai urai 28.37
- Language
- Tamil
28.37
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
ஓரணுத் தெய்வக் கண்ணோ ருணர்குவர்
²தேரார் பூதத் திரட்சியு ளேனோர்
மாலைப் போதி லொரு³மயி ரறியார்
சாலத் திரண்மயிர் தோற்றுதல் சாலும்
146
உரை
149
தெய்வக்கண்ணோர் - ஞானக்கண்ணுடையவர்கள்; ஓர் அணு அறிகுவர் - ஒவ்வோரணுவினையும் கண்டறிகுவர்; ஏனோர் அஃதில்லாத பிறரெல்லாம்; பூதத் திரட்சியுள் ஓரார் - பூதமாய்த் திரண்டு நின்ற வழியும் அணு வுண்மையை யறிகுவாரல்லார்; மாலைப்போதில்-(அஃது எது போலவென்னில்) ஞாயிறு மறைந்த மாலைப்போதில்; ஒரு மயிர் அறியார் - மயிர் ஒவ்வொன்றாயிருத்தலைக் காணாமல்; சாலத்திரள் மயிர் தோற்றுதல் சாலும் - மிகுதியாய்த் திரண்டுள்ள மயிர்க் கற்றையின் பிண்டித்த தோற்றத்தைக் காண்பதை யொக்கும் எ - று.
கண் முதலிய பொறிகளால் எளிதில் காணமுடியாத அணுக்களை நுண்ணுணர்வுகொண்டு நுணுகிக்காண்டலின், ஞானவான்களைத் "தெய்வக்கண்ணோர்" என்றார்; "ஐயப் படாஅ தகத்த துணர்வானைத், தெய்வத்தோ டொப்பக் கொளல்" (குறள். 702) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஏனோர்க்கு அவ்வணு தோற்றப்படாமைக்கு மயிர்த் திரளை யெடுத்துக் காட்டினான். மாலைப்போது கூறியது, அறியாமை சூழ நிற்கும் இயல்புகாட்டி நிற்கிறது. இவ்வணுவாதம் புத்தர், சமணர், வைபாசிகர், சௌத்திராந்திகர் என்ற பலர்க்கும் உடன்பாடு; வைசேடி கரும் இதனை மேற் கொள்வர். "மாலைப் போதிலோர் மயிரு மறியார்" என்றும் பாடம்
²நோலா பூதத்திரட்சி ³மயிரும்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil