Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.43

Maṇimēkalai urai 28.43

Language
Tamil

28.43

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

185

நிம்பத் தப்பொரு ளன்மை யநித்தியம்
பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம்
இயற்றி அப்பயறு அழிதலும் ஏதுத்

184

உரை

186

நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் - வேம்பின் முளை முளைத்து வேம்பாகவே தோன்றுவது நித்தியமாம்; நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம்-வேம்பினை நட்டு முளைத்த வழி அதன் விதை யழிவது அநித்தியமாம், பயிற்றுத்தன்மை கெடாது-பயறு கும்மாயமாயவழியும் அதன் தன்மைகெடாமையின் நிலைபேறும், கும்மாயம் இயற்றி - கும்மாயத்தை யுண்டுபண்ணுதலின் தோற்றமும், அப்பயறு அழிதலும்-அப்பயறு அழிந்து போதலால் கேடும் கொள்க எ - று.

எனவே, நித்தாநித்தங்கட்கு வேம்பும், தோற்றக் கேடுகட்குப் பயற்றது கும்மாயமும் எடுத்துக்காட்டாகக் கொள்க. இனி, நித்தா நித்தங்கட்கு நீலகேசியுரைகாரர், "கல்வியா னல்லனே காமாதி யாற்றீயன், செல்வத் துயர்ந்தான் குலத்தினிற் றாழ்ந்தனனாம், வல்லுவா னொன்றொன்று வல்லா னிதுவன்றோ, நில்லாமை நிற்ற னிலை" (378. உரை மேற்.) என்று காட்டுகின்றார். கும்மாய எடுத்துக்காட்டால் தோற்ற நிலை யிறுதி கூறும் இயல்பை, "கெட்ட திரட்சியுந் தோன்றிய சாந்தும் பொருளெனவும், பட்டன வப்பொருள் பையைகளே யென்னும் பான்மையினால், விட்ட திரள்வினுந் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம், நட்டமுந் தோற்றமு நாட்டே னுருவிற்கு நானுமென்றாள்" (நீல.389) என்று நீலகேசியும் கூறுகிறது. கும்மாயம், பயற்றைக் குழையச் சமைத்த குழைவு.

Linked texts (1)