Maṇimēkalai's Renunciation 28.46
Maṇimēkalai urai 28.46
- Language
- Tamil
28.46
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
காலங் கணிக மெனுங்குறு நிகழ்ச்சியும் ஏலுங் கற்பத் தின்னெடு நிகழ்ச்சியும்
191
உரை
192
காலம் - காலமாவது, கணிகமென்னும் குறு நிகழ்ச்சியும் - கணிகமென்னும் குறுகிய காலவளவும், ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் - பொருந்திய கற்பமென்னும் நீண்டகால வளவும், ஆக்கும் - உண்டாக்கும் எ - று.
கணிகமாவது, க்ஷணிகம்; "க்ஷணிகமென்பது ஏழு செங்கழுநீரிதழை ஒரு குறட்டிலடுக்கிப் பலவானாயினானொருவன் மிகவும் கூரியதோருளிவைத்துக் கூடமிட்டுப் புடைத்தால், ஆறாம் புரையற்று ஏழாம்புரையிற் செல்லுமளவாம். இனி, "கற்பமாவது, ஓசனையகன்றுயர்ந்ததோர் வஜ்ரமலை கர்ப்பிணியுடுத்த பட்டாடை தோய்க்கப்பட்டுக் கையறத் தேய்ந்ததாம்" (நீல. 297. உரை) என்பர். நிகழ்ச்சியெல்லாம்காலத்தின் மேலனவாதலின், "காலங் கணிகமெனுங் குறு நிகழ்ச்சி" யென்றார்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil