Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 28.48

Maṇimēkalai urai 28.48

Language
Tamil

28.48

சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

195

சீவ னுடம்போ டொத்துக் கூடித் தாவில்சுவை முதலிய புலன்களை நுகரும்

195

உரை

196

சீவன் - சீவனாவது, உடம்போ டொத்துக் கூடி-உடம்போடு அதனளவும் கூடிப்பரந்து நின்று, தாவில் சுவை முதலிய புலன்களை நுகரும்-கெடாத சுவை முதலிய ஐவகைப் புலன்களையும் நுகரும் எ - று. .

உயிர்தான் நின்ற உடம்பு முழுதும் பரவிநிற்பதுபற்றி "உடம்போ டொத்துக்கூடி" என்றார். "குடங்கையில் விளக்கெனக் கொண்ட கொண்டதன், உடம்பின தளவுமாம்" (மேரு மந். 81) என்று பிறரும் கூறுப. சுவை முதலிய புலன்களை நுகருமாற்றால் செய்யும் வினைகட்கு வினை முதலாகும் உயிர், மீட்டும் அவ்வினைப்பயனை நுகர்வது குறித்துப் பிறக்கும் மறுபிறப்பினும் வினைமுதலாகி அப்புலன்களை நுகர்வதால், அப்புலன்கள் கெடாது தொடர்ந்து நிற்பதுபற்றி, "தாவில் சுவை" யென்றார். "பொறிகளாற் புலத்தெழு போகம் துய்ப்புழி, இறுதியவினைகளுக்கிறைவனாயபின், பிறிதொரு பிறப்பினவ் வினைப்ப யத்தினுக், கிறைவனா மிதுவுயி ரியற்கை வண்ணமே (மேரு மந். 82) என்பதனா லறிக.

Linked texts (1)