Maṇimēkalai's Renunciation 28.54
Maṇimēkalai urai 28.54
- Language
- Tamil
28.54
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
வைசே டிகநின் வழக்குரை யென்னப்
பொய்தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமா னியமும் விசேடமும் கூட்டமும்
241
உரை
243
வைசேடிக - ஆங்குப்போந்த வைசேடிகவாதியைக் கண்டு வைசேடிகனே; நின்வழக்குரை என்ன - உன்னுடைய நூல்வழக்கினைக் கூறுக என்று மணிமேகலை கேட்க; பொய்தீர் பொருளும்-கெடாத பொருளென்றும்; குணமும் - குணமென்றும்; கருமம் - தொழிலென்றும்; சாமானியமும்-பொதுவென்றும்; விசேடமும்-சிறப்பென்றும்; கூட்டமும் ஆம் ஆறுகூறாம் - சமவாயமென்றும் பொருள்கள் அறுவகைப்படும் எ - று. பொருளைத் திரவிய மென்றும், பொதுவைச் சாமானியமென்றும், சிறப்பை விசேடமென்றும், கூட்டத்தைச் சமவாயமென்றும் வைசேடிகர் கூறுவர். பிற்கால வைசேடிகர் இவ்வாறனோடு இன்மை கூறும் அபாவத்தைக் கூட்டிப் பொருள் ஏழென்பாராயினர். இவர்கள் கூட்டத்தை அகக் கூட்டம் புறக்கூட்டமெனப் பகுத்து அவற்றைமுறையே சமவாயமென்றும் சம்யோகமென்றும் கூறுப. இவற்றின் விரிவைப் பதார்த்த தரும சங்கிரகம், சத்தபதார்த்தி முதலிய வடநூல்களுட் காண்க.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil