Maṇimēkalai's Renunciation 28.61
Maṇimēkalai urai 28.61
- Language
- Tamil
28.61
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
றொன்றிய வாதியு முரைத்தன னுடனே பூத வாதியைப் புகனீ யென்னத்
262
உரை
263
கூட்டம்-சமவாயமாவது; குணமும் குணியுமென்று ஒன்றிய-குணமும் குணியுமாய் ஒன்றிய ஒற்றுமையாமென்று, வாதியும் உரைத்தனம் - வைசேடிக வாதியும்கூறி முடித்தானாக; உடனே பூதவாதியை நீ புகல் என்ன - உடனே ஆங்குப் போந்த பூதவாதியைக் கண்டு நின்வாதத்தை நீ சொல்லுக வென்று மணிமேகலை கேட்க எ - று. என்றது, குணத்துக்கும் குணிக்குமுள்ள இயைபே சமவாயமென்பது என்றதாம். கணாதர் காரணத்துக்குங் காரியத்துக்குமுள்ள தற்கிழ மைத் தொடர்பு சமவாயம் என்பர்; அவருக்குப் பிற்போந்த வைசேடி கர் பழத்திற் சுவையும் மணியிலொளியும்போல இடமும் இடத்து நிகழ் பொருளுமாகிய தற்கிழமையியைபு சமவாயம் என்றும் வேறுபிறர் அவர்களை மறுத்தும் கூறுவர்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil