Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.35

Maṇimēkalai urai 30.35

Language
Tamil

30.35

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

195 உபயா சித்த மன்னியதரா சித்தஞ்
சித்தா சித்த மாசிரயா சித்தம்
எனநான் கசித்த முபயா சித்தஞ்

193

உரை

195

அசித்தம் - அசித்தமென்னும் ஏதுப்போலி; உபயாசித்தம் .........என நான்கு - உபயாசித்தமென்றும் அன்யதரா சித்தமென்றும் சித்தா சித்தமென்றும் ஆசிரயா சித்தமென்றும் நான் காய் விரியும் எ - று.

நியாயப்பிரவேசமுடையார்¹ இவ்வாறே அசித்தவேதுப் போலி நான்குவகைப் படுமென்றும் அவை உபயாசித்தம் அன்னியதராசித்தம் சந்திக்தாசித்தம் ஆசிரயாசித்தம் எனபனவாம் என்றும் கூறுவர்; பிரசத்த பாதர்² உபயாசித்தம் அன்னியதராசித்தம், தற்பவாசித்தம் அணுமேயாசித்தம் என நால்வகைப்படுத்துக் கூறுவர். சுலோக வார்த்திக முடையார்,³ அசித்தம் சொரூபாசித்தம் ஆசிரயாசித்தம் என இரண்டாமென்றும், உபயாசித்தம் அன்னியதராசித்தம் சந்திக்தாசித்த மென்ற மூன்றும் இவ்விரண்டின் உள்வகையாமென்றும் கூறுவர்; சந் திக்தாசித்தம் என்பது இந்நூலிற் காணப்படவில்லையாயினும், சித்தா சித்தம் என்பது அதன் நிலையில் நிற்கிறது.

1 நியா. பிர. பக். 9-10(3) ² வைசேடிகபாடியம், பக். 238-9. 3 அனுமானபரிச்சேதம் (75-83).

Linked texts (1)