Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.38

Maṇimēkalai urai 30.38

Language
Tamil

30.38

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

205 சித்தா சித்த மாவது
ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல்
ஆவி பனியென வையுறா நின்றே
தூய புகைநெருப் புண்டெனத் துணிதல்

203

உரை

206

சித்தாசித்தமாவது-சித்தாசித்தமென்னும் அசித்த வேதுப் போலியாவது; ஏது சங்கயமாய்-எடுத்தோதும் ஏதுவே ஐயத்திற்கிடமானதாயிருக்க; சாதித்தல்-அது கொண்டு ஒன்றைச் சாதிப்பதாம்; ஆவி பனி என ஐயுறாநின்றே - புகையோ பனியோ என ஐயுற்றுத் துணியாமலே; தூய புகை - அது தூய புகையாமெனத் தானே ஏறட்டுக்கொண்டு; நெருப்புண்டு எனத் துணிதல்-அங்கே நெருப்புளது என்று துணிந்து சொல்லுதல் எ - று.

புகை யென்பதே துணிபாயின் இவ்வேது சித்தமாயும், பனி யென்று துணியப்படின் அசித்தமாயும் திரிதலின், இது சித்தாசித்த மென்னும் குற்றமாயிற்று. சங்கயமாக வென்பது சங்கயமாயென நின்றது. சங்கயம்: சம்சயமென்பதன் திரிபு. இதனை நியாயப்பிரவேச முடையோர், சந்திக்தா சித்தமென்றும், பிரசத்தபாதர். தற்பவாசித்த மென்றும் கொண்டு, ஈண்டுக் காட்டிய உதாரணத்தையே தத்தம் நூல்களிற் காட்டியுள்ளனர்.

Linked texts (1)