Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.48

Maṇimēkalai urai 30.48

Language
Tamil

30.48

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

280

285 என்ன நான்கு வகைய தாகும் அத
தன்மச் சொரூப விபரீத சாதனஞ்
சொன்ன வேதுவிற் சாத்திய தன்மத்து
உருவங் கெடுதல் சத்த நித்தம்
பண்ணப் படுதலி னென்றாற் பண்ணப்
படுவ தநித்தமா தலிற்பண்ணப் பட்ட
ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட்
டநித்தஞ் சாதித்த லான்விய ரீதந்

280

உரை

287

அத்தன்மச் சொரூப விபரீத சாதனம் - அந்நால்வகை விருத்த வேதுப் போலிகளுள் தன்மச் சொரூப விபரீத சாதன வேதுப்போலியாவது; சொன்ன ஏதுவில் - வாதி தான் கூறிய ஏதுவினாலே; சாத்திய தன்மத்து உருவம் கெடும்-சாத்திய தன்மமாகிய துணிபொருளின் சிறப்பியல்பு கெட மொழிவது; சத்தம் நித்தம் பண்ணப்படுதலின் என்றால் - சத்தம் நித்தம் என்று பக்க வசனம் கூறும் வாதி பண்ணப்படுவதால் என்று ஏதுக் கூறுவானாயின்; பண்ணப்படுவது அநித்தமாதலின் - யாதொன்று பண்ணப் படுவது அஃது அநித்தமாதலால் ; பண்ணப்பட்ட ஏது-பண்ணப் படுதலாகிய ஏது ; சாத்திய தன்ம நித்தத்தை விட்டு - சாதிக்கப் பட வேண்டிய தன்மமாகிய நித்தயத்துவத்தைச் சாதிக்காமல் ; அநித்தம் சாதித்தலான் - சத்தம் அநித்தமென்று சாதித்துக் கொடுப்பதால் ; விபரீதம் - விருத்தமாயிற்று எ - று.

இவ்விருத்தவேது சிறிது சுருக்கமாக நியாயப் பிரவேசத்துட் காணப்படுகிறது. அகரச் சுட்டு, நான்காக வகுத்துக் கூறியதனைக் காட்டிநின்றது. சாத்திய தன்மமாவது, சத்தம் நித்தம் என்ற பக்க வசனத்துள் துணியப்படுவதாய் நின்ற நித்தத்துவ மென்ற தன்மம். உருவம், சொரூப விலக்கணமெனப்படும் சிறப்புத் தன்மம். கெடுதல் ஈண்டுச் சாதிக்கப்படா வகைமொழிதல் ; பிரதிவாதிக்கு நல்ல சாதன மாதல் என்றுமாம். பண்ணப்படாமை நித்தத்துவத்துக்குச் சிறப்பியல் பாதலின், அந்நித்தத்துவத்தைச் சாதிப்பான் பண்ணப்படுதலென்று ஏதுக்கூறுதல் அச் சிறப்பியல்புக்கு மாறாதல் காண்க. பண்ணப்படுதலாகிய ஏதுவைப் "பண்ணப்பட்ட ஏது" என்றார் ; பொச்சாவாமையாகிய கருவியைப் "பொச்சாவாக் கருவி" (குறள்-53.7) என்றாற் போல. பக்க தன்மத்தைச் சாதிக்க வந்த ஏது, அதனைச் செய்யாது சபக்கத்தும் நில்லாது விபக்கத்துப் பொருந்தி நிற்றலின், "விபரீதம்" என்றார் இதன்கண் "சொன்ன வேதுவிற் சாத்திய தன்மத் துருவம் கெடுதல்" என்பது இலக்கணம் கூறிற்று. ஏதுலின் இன்; ஏதுப் பொருட்டாய் நின்ற ஐந்தனுருபு சுலோக வார்த்திகமுடையாரும் ஈண்டுக் காட்டிய உதாரணமே காட்டுவராயினும், இவ்விருத்தத்தைத் தருமபாதை என்பர்.

Linked texts (1)