Maṇimēkalai's Renunciation 30.50.8
Maṇimēkalai urai 30.50.8
- Language
- Tamil
30.50.8
தன்மிச் சொரூப விபரீத சாதனம் - தன்மிச் சொரூப விபரீத சாதனமெனப்படும் விருத்த வேதுப் போலியாவது; தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை - வாதியாற் கூறப்படும் தன்மியின் சிறப்பியல்பை ; ஏதுத்தானே - அவன் கூறும் ஏதுவே ; விபரீதப்படுத்தல்-விருத்தமாக்கி விடுவது; பாவம் திரவியம் அன்று கண்மமன்று குணமுமன்றாம் - பாவம் திரவியம் குணம் கன்மம் என்பவற்றுள் ஒன்றுமன்று ; எத்திரவியம் எக்குணம் கன்மத்து உண்மையின் வேறாதலால் - எல்லாப் பொருள் குணம் தொழில் களிலுமுள்ள உண்மைத் தன்மையின் வேறாய்ப் பொதுவாய வுண்மைத் தன்மையுடைமையால்; சாமானிய விசேடம் போல் - சாமானியமும் விசேடமும் போல ; என்றால் - என்று வைசேடிக வாதி யொருவன் சொன்னால்; பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் நின்றவற்றினிடை யுண்மை வேறாதலால்-பொருள் குணந்தொழி லென ஒருங்கு நின்றவற்றின் கண்ணுள்ள உண்மைத் தன்மையின் வேறாகப் பொதுவுண்மைத் தன்மையுடைமையால் ; என்று காட்டப்பட்ட வேது - என்று வாதியாற் கூறப்பட்ட ஏதுவின்கண் ; மூன்றினுடை யுண்மை வேறுபடுத்தும் பொதுவாமுண்மை - மூன்றின் கண்ணுமுள்ள உண்மைத் தன்மையின் வேறுபட்டு நிற்கும் பொதுவாம் உண்மைத் தன்மை; சாத்தியத்து இல்லாமையினும் - சாதிக்கப்படும் பக்க தன்மியாகிய பாவத்தின்கண் இல்லாமையானும் ; திடடாந்தத்தில்-திட்டாந்தத்தின் கூறப்பட்ட; சாமானிய விசேட போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும் - பொதுவுஞ ¹ இச்சாங்கிய வாதம் சாங்கிய காரிகை (காரிகை 17) யிலும் சுலோக வார்த்திகத்திலும், (அனுமானபரி. 96-107) நியாய ரத்னாகரத்திலும், சாந்த ரஷிதருடைய தத்துவ சங்கிரகத்திலும் (vii 307-10) காணப்படுகிறது சிறப்புமாகிய இயல்புடைய பொருள்களும் ஒன்றில்வழிப் பிறி தொன்றில்லை யாதலானும் ; பாவம் என்று பகர்ந்த தன்மியினை - பாவமென்று பக்க வசனத்துள் எடுத்தோடப்பட்ட தன்மியின் சொரூப வியல்பைக் கெடுத்து ; அபாவமாக்குதலால் - அபாவமெனச் சாதித்து விடுதலால் ; விபரீதம் - விருத்தப் போலியாயிற்று எ - று.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil