Maṇimēkalai's Renunciation 31.14
Maṇimēkalai urai 31.14
- Language
- Tamil
31.14
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
65
70
75 தீவினை யென்ப தியாதென வினவின்
ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழை
வுலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்
றுள்ளந் தன்னி னுருப்பன மூனறுமெனப்
பத்து வகையாற் பயன்றெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவ ராயின்
விலங்கும் பேயு நரகரு மாகிக்
கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர்
64
உரை
75
ஆய்தொடி நங்காய் - அழகிய வளையணிந்த நங்கையே; தீவினை யென்பது யாதென வினவின்-தீவினையென்று சொல்லப் படுவது யாதென்று கேட்பாயாயின்; அதுகேளாய்-யான் சொல்லு மதனைக் கேட்பாயாக ; கொலையே களவே காமத் தீ விழைவு - கொலையும் களவும் காமமாகிய தீய வேட்கையுமாகிய ; உலையா வுடம்பில் தோன்றுவ மூன்றும் - கெடாத வுடம்பால் உண்டாகும் தீவினைகள் மூன்றும் ; பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என-பொய்யுரையும் புறங்கூறலும் கடுஞ்சொற் சொல்லுதலும் பயனில்சொல் சொல்தலும் என்று ; சொல்லில் தோன்றுவ நான்கும் - வாக்கனிடத்தே யுண்டாகும் தீவினைகள் நான்கும் ; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி யென்று - பிறர் பொருளை வௌவக் *கருதலும் வெகுளுதலும் குற்றம்படவுணர்தலு மென்று ; உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என - மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றுமென ; பத்துவகையால் - பத்துவகைப்படுதால்; பயன்தெரி புலவர்-வினைவகையும் அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்; இத்திறம் படரார்-இப் பத்தினையும் ஒருநாளும் நெஞ்சாலும் நினையார்; படர்கு வராயின் - நினைவராயின் ; விலங்கும் பேயும் நரகருமாகி - விலங்கும் பேயும் நரகருமாகிய கதிகளுட் பிறந்து ; கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் - கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப வுடம்புற்று வருந்துவர் எ - று.
எனவே, தீவினை, மெய் வாய் மனம் என்ற மூன்றாலும் செய்யப்படு மென்றும், அவ்வகையால் மெய்யில் மூன்றும் வாயில் நான்கும் மனத்தில் மூன்றுமாக வினை பத்தாமென்றும், இவற்றைச் செய்தோர் விலங்கும் பேயும் நரகருமாய்ப் பிறந்து துன்புறுவரென்றும் கூறியவாறாம். பிறரும், "மருடறா மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத் தாமே" (நீலகே. மேற்.) என்பர். ஆங்க என்பது அசை நிலை. பொதுவாகத் துறவிகாளற் பெரிதும் விலக்கப்பட்டது காமமெனினும், புத்த துறவிகள் ஏனை யெல்லாரினும் விஞ்சினவாராவர் ; லளிதா விஸ்தரம் என்ற நூல் (பக்: 206) இக் காமத்தின் தீமையை முப்பத்து மூன்று உவமைகளால் விரித்துக் கூறுவதை நோக்கின், "காமத் தீவிழை" வென இவர் கூறுவது பொருத்தமாகவே யுளது. தான் உள்ளளவும் கொலை முதலிய குற்றங்கட் கேதுவாதல் பற்றி, "உலையாவுடம்பு" என்றார். உலைதல் - ஈண்டுக் குற்றத்தின் தொடர்பு கெடுதல். குறளை - கோட் சொல்லதலுமாம். கடுஞ்சொல் - இன்னாச்சொல். "சொல்லுக சொல்லிற் பயனுடைய" (குறள். 200) என்றமையின், பயனில்சொல்சொல்லுதல் தீவினையாயிற்று. நற்காட்சியின் மறுதலை யாதலின் "பொல்லாக் காட்சி" யென்றார். மனம் சிறிது மறப்பினும், அதற்கிடனாகும் உடம்பின் துன்பநிலை மறவாது கலங்கி யலையச் செய்யுமாறு தோன்ற, "கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்" என்றார். எனவே, கலக்கமும் கவலையுமே உள்ளத்திருப்பனவாம் என்றவாறயிற்று. வினையைச் சமஸ் காரம் என்று வழங்கும் க்ஷேமேந்திர்ரும், இது மன மொழி மெய்களால்
தோன்றுவதென்றே தமது போதிசத்துவ அவதானகற்பம் என்ற நூலிற் கூறியுள்ளார். வினையுண்மை கொள்ளும் ஏனைச் சமயத்தவரும் இதனை யுடன்பட்டுரைப்பர். சிலர் இம் மூன்றுடன் அறிவென ஒன்றைக் கூட்டி, நான்காக வுரைத்தலு முண்டு.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil