Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 31.36

Maṇimēkalai urai 31.36

Language
Tamil

31.36

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

185
அந்நோய் தனக்குப்
பேதைமை செய்கை யவாவே பற்றுக்
கரும வீட்டமிவை காரண மாகும்

183

உரை

185

அந் நோய் தனக்கு - அத் துக்கத் தோற்றத்துக்கு; பேதைமை செய்கை அவா பற்றுக் கரும வீட்டம் இவை-பேதைமையும் வினையும் வேட்கையும் பற்றும் வினைப்பயன்களும் என்ற இவையே; காரணமாகும் - காரணமாம் எ - று.

அந் நோய் என்ற சுட்டு ஆற்றலால் அதன் தோற்றம் குறித்து நின்றது. வினையும் வினைப்பயனும் வேறு வேறாய்க் காரணமாதல் தோன்ற, "செய்கை" யென்றும், "கரும வீட்ட" மென்றும் கூறினார். துக்கத்தோற்றம் கூறுமாற்றால் அதன் காரணம் பேதைமை முதலிய வைந்துமாமென்று கூறி இரண்டாவது வாய்மை கூறியவாறு. தொக்கு நின்ற ஏகாரம் பிரிநிலை.

Linked texts (1)