Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 31.38

Maṇimēkalai urai 31.38

Language
Tamil

31.38

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

190
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள வறிவிவை யைங்கந்த மாவன

189

உரை

190

உருவு - உருவமும்; நுகர்ச்சி - வேதனையும்; குறிப்பு - குறிப்பும்; பாவனை - பாவனையும்; உள்ள அறிவு - விஞ்ஞானமும் என்ற; இவை ஐங்கந்தமாவன - இவைகள் ஐவகைக் கந்தங்களெனப்படும் எ - று.

ஈண்டுக் கூறிய உருவு முதலைந்தையும் "ஓங்குருவம் வேதனையுளக்குறிப்புப் பாவனைமெய், தாங்குணர்வென் றைந்தாங்கந் தம்" என்று பரமத திமிரபானு வென்னும் நூல் கூறுகிறது. வட நூல்கள் இவ் வைந்தனுள் நுகர்ச்சியை வேதனை யென்றும், குறிப்பினைச் சஞ்ஞை யென்றும், பாவனையைச் சம்ஸ்காரமென்றும் கூறுகின்றன. இவற்றுள் உருவமாவது உடல்; அது பூதம் உபாதாய மென்னும் இரண்டினாலுண்டாம்; வேதனையாவது துன்பமும் இன்பமும் இரண்டும் விரவுவது மென மூன்றாகும்; குறிப்பாவது ஐம்பொறியும் மனமுமாம்; பாவனையாவது மெய் வாய் மனம் என்ற மூன்றாலு முண்டாகும் அறமும் பாவமுமாம்; விஞ்ஞானமாவது இந்நான்கினோடும் பொருந்தி யெண்ணும் எண்ணமாம் என்று பரமத திமிரபரனு உடையார் கூறுகின்றார். இவ் வைந்துங் கூடிய கூட்டமே அருவுருவெனப்படும் உயிருமுடம்புமெனக் கொள்க.¹ இவற்றின் விரவைச் சிவஞானசித்தி முதலிய தமிழ் நூல்களிலும் சருவதரிசன சங்கிரக முதலிய வட நூல்களிலும் கண்டு கொள்க.

¹ தரும சங்கிரகம் Sec. 96.

Linked texts (1)