Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 31.47

Maṇimēkalai urai 31.47

Language
Tamil

31.47

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

தோன்றியது கெடுமோ கெடாதோ வென்றாற்
கேடுண் டென்றல் துணிந்துசொல லாகுஞ்

238

உரை

239

தோன்றியது கெடுமோ கெடாதொ என்றால்-தோன்றிய தொரு பொருள் கெடுமோ கெடாதோ என்று வினாவினால் ; கேடுண்டு என்ற துணிந்து சொலல் ஆகும் - விடை தோன்றியதற்குக் கேடுண்டு என ஒருதலையாய்த் துணிந்து கூறுதல் துணிந்து சொல்லுதலாம் எ - று.

தோன்றின் மறைதல் கண்கூடாதலின், தோன்றியது கெடுமோ கெடாதோ என்று வினவுவோர்க்குக் கெடுமெனத் துணிந்து கூறல் செப்பாயிற்று. தெய்வச்சிலையாரும் "துணிந்து கூறலாவது தோன்றியது கெடுமோ என்ற வழி, கெடுமென்றல்" என்பர். தோன்றியது கெடுதற்கு, "தோற்றமுண்டேல் மரணமுண்டு" (7 : 2) என நம்பி யாரூரரும் கூறியருளுதல் காண்க.

Linked texts (1)