Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 31.54

Maṇimēkalai urai 31.54

Language
Tamil

31.54

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி யுய்த்து மயக்கங் கடிக

258

உரை

259

சுருதி சிந்தனா பாவனை தரிசனை கருதி உய்த்து-சுருதியும் சிந்தனையும் பாவனையும் தரிசனையும் ஆகிய நான்கையும் ஆராய்ந்துணர்ந்து; மயக்கம் கடிக - மயக்கத்தைப் போக்குவாயாக எ-று.

சுருதியாவது அறவுரைகேட்டல், சிந்தனையாவது கேட்டவற்றைச் சிந்தித்தல். பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல். தரிசனையாவது உண்மை தெளிதல். இச் சுருதி முதலிய நான்கினையும் உபேக்ஷா பாவனை யென்றும் கூறுப. இதனால் "செத்தினும் போழினும் செஞ்சாந் தெறியினும்" திரியாத மெய்யுணர்வு¹ விளைதலால், "கருதியுய்த்து மயக்கம் கடிக" என்றார். கருதியுய்த்தல் - ஆராய்ந்துணர்தல்.

¹லலிதா விஸ்தாரம். 35: 9.

Linked texts (1)