Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 6.11

Maṇimēkalai urai 6.11

Language
Tamil

6.11

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

75

எங்கோ னியல்குணன் ஏதமில் குணப்பொருள்
உலக நோன்பிற் பலகதி உணர்ந்து
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை யெய்த
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதி ராழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுத லல்லது யாவதும்
மிகைநா வில்லேன் வேந்தே வாழ்கென

70

உரை

79

தான் எமக்கு அருளிய -அவன் எமக்கு அறிவுறுத்த, எங்கோன் இயல்குணன் ஏதமில் குணப்பொருள் - எம்முடைய இறைவன் இயல்பாகவே தோன்றிய குணங்களை யுடையவன் குற்றமற்ற குணங்களின் பொருளாயுள்ளோன், உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் - உலகசீலத்துடன் பல பிறப்புக்களிலும் பிறந்து பிறந்து உணர்ந்து உயிர்கட்கு நல்லறிவு புகட்டிய தனக்கென்று உயிர் வாழாத பிறர்க்கே உரிமைபூண்டொழுகுபவன், இன்பச்செவ்வி மன்பதை எய்த-நிரு வாணமடைதற்குரிய பருவத்தை உயிர்ப்பன்மைகள் அடைய, அருள் அறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் - அருளாகிய அறத்தினைப் பூண்ட ஒப்பற்ற பெரிய மேற்கோளினாலே, அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய கதிர்களையுடைய ஆழியை உலகத்திற் பலவகையாக உருட்டி, காமற் கடந்த வாமன் பாதம் - மாரனை வென்ற புத்தனது திருவடிகளை, தகை பாராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன் - பாராட்டித் துதித்தலையன்றி வேறுபொருள் களைப்பற்றிச் சிறிதும் பேசாத நாவினையுடையேன், வேந்தே வாழ்க என-மன்னவ வாழ்வாயாக என்று சுதமதி கூற

உலக நோன்பு-இல்வாழ்க்கையிலிருந்து செய்யும் நோன்பு, ஒழுக்கம் ; அதனால் இல்லறத்தார் உலகநோன்பிகள் எனப்படுவர். கதி- பிறப்பு. புத்தன் அருளாலே பகவகைப் பிறப்பும் எடுத்தானெனப் புத்தசாதகக் கதைகள் கூறாநிற்கும்: ¹"எறும்புகடை யயன்முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப் பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி, எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தின், அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்" ²"வானாடும் பரியாயு மரிண மாயும் வன்கேழற் களிறாயு மெண்காற் புண்மான், தானாயும் பணையெருமை யொருத்தலாயுந் தடக்கையிளங் களிறாயுஞ் சடங்க மாயும், மீனாயு முயலாயு மன்ன மாயு மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க, மானாயுங்கொலை களவு கட்பொய் காமம் வரைந்த வர்தா முறைந்தபதி மானா வூரே" என்பன காண்க. புத்தன் தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் என்ற கருத்து "பிறர்க்கற முயலும் பெரியோய்," "தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பு ; மன்னுயிர் முதல்வன்" (11 ; 65 ;55; 116-7) என இந்நூலுள்ளே பின்ன ரும் வந்துள்ளன ; ³"இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்ச்குங் காவ லென, அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும், மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும், பொதுவன்றி நினக் குரித்தோ புண்ணியநின் றிருமேனி," "தீதியல் புலியது பசிகெடு வகைநின திருவுரு வருளிய திருமலி பெருமையை," என்பனவும் காண்க. சிறுகுடிகிழான் பண்ணன் என்பானைச் சிறப்பிக்குமிடத்து அகப்பாட்டிலே (54) இத்தொடர் முழுதும் வந்துள்ளது ; அருளறம்- அருளாகிய அறம் ; அருளே எல்லா அறங்களிலும் மேலாயது என்பது ⁴"ஒன்றாக நல்லது கொல்லாமை" "அஹிம்ஸா பரமோதர்ம:" என்ப வற்றான் அறியப்படும். கதிர் - திகிரியின்

¹ வீர. யாப்பு, 11 எடுத்திக்காட்டு. ² நீல. சமய. ³ வீ. யாப்பு. 11. எடுத்துக்காட்டு. ⁴ குறள். 323. ⁵ சிலப். 10; 196 - 7.

Linked texts (1)