Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 6.13

Maṇimēkalai urai 6.13

Language
Tamil

6.13

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

85

90 பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்
களிக்கயல் பிறழாக் காட்சிய ளாகிக்
கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்
றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது
புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயிற் கெடுதன் றிறமென
மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான்
சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள

84

உரை

93

பளிக்கறை திறந்து-மணிமேகரை பளிக்கு மண்டபத்தைத் திறந்து, பனிமதி முகத்துக் களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகி- குளிர்மதி போலும் முகத்திலே மதர்த்த கயல்போலுங் கண்கள் பிறழாத காட்சியையுடையளாய், கற்புத்தான் இலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று- கற்பில்லாதவள் நல்ல தவவுணர்ச்சியில்லாதவள் மரபிற்கேற்ற காவலற்றவள் பொருள் கொடுப்பார்க்குத் தன்னை விற்கும் விலை மகள் என்று இவ்வாறாக, இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என் னாது-பழித்துரைத்தவனாய் விரும்பினோன் என நினையாமல், புது வோன் பின்றைப் போனது என் நெஞ்சம் - ஏதிலான் பின்னே என்னுடைய உள்ளம் சென்றது; இதுவோ அன்னாய் காமத்து இயற்கை - அன்னையே இங்ஙன முள்ளதோ காமத்தின் இயல்பு, இதுவே ஆயின கெடுக தன்திறம் என-இவ்வாறாயின் இதன்வலி கெடுவதாக என்று, மதுமலர்க் குழலாள் மணிமேகலை தான் சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-தேனவிழும் மலர்களை யணிந்த கூந்தலையுடைய அவள் சுதமதியோடும் கூறிநின்ற பொழுதில் ;

சுமதியை நோக்கிய பார்வை விலகாது நின்றாளென்பர் 'களிக் கயல் பிறழாக் காட்சியளாகி' என்றார். வருணக் காப்பு - வருண மாகிய காவல் என்றுமாம். மணிமேகலை திறந்து காட்சியளாகிக்
கெடுக தன்றிறமென நின்ற வெல்லையுள் என்க.

Linked texts (1)