Maṇimēkalai's Renunciation 6.6
Maṇimēkalai urai 6.6
- Language
- Tamil
6.6
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
35
யாப்புடை யுள்ளத் தெம்மனை யிழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன்
மழைவளந் தரூஉம் அழலோம் பாளன்
பழவினைப் பயத்தால் பிழைமண மெய்திய
எற்கெடுத் திரங்கித் தன்தக வுடைமையின
குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறைப்
பரந்துசென் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடன்மண்டு பெருந்துறைக் காவிரி யாடிய
32
உரை
40
யாப்புடை உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன்-என் தாயை இழந்தோனும் உறுதிபொருந்திய உள்ளத்தை யுடைய பார்ப்பன முதியோனும், படிம உண்டியன்-பட்
டிணிவிட்டுண்ணும் நோன்பினையுடையோனும், மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் - மழைவளத்தைத் தரும் முத்தீயோம்பு வோனுமாகிய எந்தை, பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய எற்கெடுத்து இரங்கி-முன் செய்வினையின் பயனால் மாருத வேகனிடம் அகப்பட்டுப் பிழைமணம் எய்திய என்னைக் காணாமையால் வருந்தி, தன் தகவுடைமையின் - தனது தகுதி யுடைமையால், குரங்குசெய் கடல் குமரியம் பெருந்துறைப் பரந்து செல் மாக்க ளொடு-குரங்கு செய்த குமரிக்கடலின் பெரிய துறைக்கண் நீராடுதற்கு மிக்குச் செல்லும் மக்களோடே, தேடினன் பெயர்வோன் ; என்னைத் தேடிச் செல்பவனாய், கடல் மணடு பெருந்துறைக் காவிரி ஆடிய-இடையே காவிரி கடலிற் கலக்கும் பெரிய சங்க முகத்துறையில் நீராடுதற்கு, வடமொழி யாளரொடு வருவோன்- பார்ப்பனரோடு வருபவன் ;32--40. யாப்புடை உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன்-என் தாயை இழந்தோனும் உறுதிபொருந்திய உள்ளத்தை யுடைய பார்ப்பன முதியோனும், படிம உண்டியன்-பட் டிணிவிட்டுண்ணும் நோன்பினையுடையோனும், மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் - மழைவளத்தைத் தரும் முத்தீயோம்பு வோனுமாகிய எந்தை, பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய எற்கெடுத்து இரங்கி-முன் செய்வினையின் பயனால் மாருத வேகனிடம் அகப்பட்டுப் பிழைமணம் எய்திய என்னைக் காணாமையால் வருந்தி, தன் தகவுடைமையின் - தனது தகுதி யுடைமையால், குரங்குசெய் கடல் குமரியம் பெருந்துறைப் பரந்து செல் மாக்க ளொடு-குரங்கு செய்த குமரிக்கடலின் பெரிய துறைக்கண் நீராடுதற்கு மிக்குச் செல்லும் மக்களோடே, தேடினன் பெயர்வோன் ; என்னைத் தேடிச் செல்பவனாய், கடல் மணடு பெருந்துறைக் காவிரி ஆடிய-இடையே காவிரி கடலிற் கலக்கும் பெரிய சங்க முகத்துறையில் நீராடுதற்கு, வடமொழி யாளரொடு வருவோன்- பார்ப்பனரோடு வருபவன் ;
குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; மழைவளந் தரூஉம் அழல் என்க ; ¹"மழைக்கரு வுயிர்க்கு மழற்றிக ழட்டின், மறையோ ராக்கிய வாவுதி நறும்புகை" என்பது காண்க. மாருத வேகனுக்குத் தான் சிலநாள் உரியளானது பற்றி, "பிழைமண மெய்திய" என்றாள். குமரி-கன்னியாகுமரி ; ²"தொடியோள் பௌவமும்" என்பதன் உரை நோக்குக. வடமொழியாளர்-பார்ப்பனர் ; பார்ப்பனியை "வடமொழியாட்டி" (13 : 73) என்று பின்னர்க் கூறுவர்.
¹ சிலப். 10 : 143-4. ² சிலப். 8 : 1.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil