Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 6.8

Maṇimēkalai urai 6.8

Language
Tamil

6.8

மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

50

புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிரி மாலை கைக்கொண் டென்ன
நிணநீடு பெருங்குடர் கையகத் தேந்தி
என்மக ளிருந்த இடமென் றெண்ணித்
தன்னுறு துன்பந் தாங்காது புகுந்து
சமணீர் காள்நுஞ் சரணென் றோனை
இவணீ ரல்லவென் றென்னொடும் வெகுண்டு

47

உரை

52

ஒருநாள் புனிற்றுஆ பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்-ஒரு நாள் ஈன்றணிமையையுடைய பசுவொன்று பாய்ந்தமையால் வயிற்றுலுண்டான புண்ணினையுடையனாய், கணவிரி மாலை கைக்
கொண்டென்ன - அலரிமாலையைக் கையிற்கொண்டாற்போல நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி-நிணத்துடன் நீண்ட பெரிய குடரைக் கையில் ஏந்திக்கொண்டு, என்மகள் இருந்த இட மென்று எண்ணி-பண்டு என்மகள் இருந்த இடமாகும் என்று நினைந்து, தன் உறு துன்பம் தாங்காது புகுந்து - தனது மிக்க துன்பத்துனைத் தாங்க வியலாமற் புகுந்து, சமணீர்காள் நும் சரண் என்றோனை - சமணர்களே உம்முடைய அடைக்கலம் என்று கூறியவனை ;

பாய்ந்த புண் : பெயரெச்சம் காரணப் பொருட்டாயது ; ஆறு சென்ற வியர் என்புழிப்போல. ¹"நிணவரிக் குறைந்தவதர் தொறுங், கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்னை, புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந் தோர்" என உவமங் கூறியிருப்பது அறியற்பாலது. இடமென்று-இட மாகலின் புரந்தருறள்வரென்று.

¹ அகம். 31.

Linked texts (1)