Parandappadi p23
Parandappaḍi p23
- Language
- Sanskrit
p23
சதுர்த்த்யந்தமான ப்ரதமாக்ஷரத்திலே - ரக்ஷகத்வ ஸேஷித்வங்கள் சொல்லி, மத்யமாக்ஷரமான உகாரத் திலே - அந்ஸேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லி, த்ருதீ யாக்ஷரமான மகாரத்திலே - ப்ரக்ருதே:பரமான ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ஜ்ஞானாநந்த லக்ஷணத்வஞ்சொல்லி, நமஸ்ஸாலே - விரோதி ஸ்வரூபத்தினுடைய த்யாஜ்யத்வஞ் சொல்லி, பகவச்சேஷத்வ பௌஷ்கல்ய ஹேதுவான பாகவதஸேஷத்வஞ்சொல்லி, ஸேஷத்வாநுரூபமான உபாயஸ்வரூபஞ்சொல்லி,நாராயண பதத்தாலே-ஸர்வாத்ம ஸேஷியான ஸர்வேஸ்வரன் ஸ்வரூபஞ்சொல்லி, சதுர்த்தி யாலே - ஸேஷவ்ருத்தியை ப்ரார்த்தித்துத் தலைக்கட்டுகை யாலே, ரக்ஷகத்வம் தொடங்கி ஸேஷவ்ருத்தி பர்யந்தமான நடுவுண்டான அர்த்தவிஸேஷங்களெல்லாம் பதார்த்த மாகக்கடவது. ஈஸ்வரனுடைய ஸர்வஸேஷித்வ ஸர்வரக்ஷகத்வங்களும் நிரதிசயபோக்யத்வமும் தாத்பர்யார்த்தம்.