Pramāṇa · Search · About · API

Parandappadi p251

Parandappaḍi p251

Language
Sanskrit

p251

(7) ப்ரதமபதம் கைங்கர்யப்ரதிஸம்பந்தி விஸிஷ்ட மென்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிறது. ஸேஷத்வப்ரதி ஸம்பந்தி மிதுநமாயிருக்குமாபோலே, கைங்கர்யப்ரதி ஸம்பந்தியும் மிதுநமாயிறேயிருப்பது. a "கோலத் திருமாமகளோடுன்னைக் கூடாதே" என்றும், b "ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப" என்றும் நம்மாழ்வாரும் மிதுநமே ப்ராப்யமென்று அருளிச்செய்தார். அவர்தமக்கு அடியான இளையபெருமாளும் 1. "ஸஹ வை தே,ஹ்யா" என்று கிஞ்சித்காரத்துக்கு விஸிஷ்டவேஷமே விஷயமென்று அருளிச்செய்தார். அவர் தம்முடைய பூர்வாவஸ்தையிலும் c "திருமாற்கரவு" என்கிறபடியே கிஞ்சித்கார ப்ரதிஸம்பந்தி விஸிஷ்டமாயிறேயிருப்பது. இவர்கள் இத்தனைபேரையும் அடியொற்றின பரமாசார்யர், 2. "ப்ரஹர்ஷயிஷ்யந்தம் மஹிஷீம் மஹோபுஜம்" என்றும், 3. "ஸ்ரீயஸ்ஸிரியம்" என்றும், விஸிஷ்டவேஷத்தை அருளிச் செய்து, 4. "ஏகாந்திக நித்யகிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி"