Purananuru 3.p10
Puṟanāṉūṟu paḻaiya urai 3.p10
- Language
- Tamil
3.p10
(இ - ள்.) உவாநாளின் மதியினதுவடிவுபோலும் வடிவினையுடைய உயர்ந்த வெண்கொற்றக்குடைநிலைபெற்ற கடலெல்லைக்கண் நிலத்தை நிழற் செய்ய,காவலாகிய வீரமுரசம் இழுமென முழங்கும் ஓசையையுடைத்தாய்முழங்க, சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்ஒழியாத வண்மையையுமுடைய பாண்டியர் மரபினுள்ளாய்!குற்றமற்ற கற்பினையுடைய சேயிழைக்குத் தலைவ!பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த மத்தகத்தினையும்,அணுகுதற்கரிய வலியையும், மணநாறும் மத்தத்தினையுமுடைய,கொம்பு படைக்கலமாகக் கொண்டு பகைவர் மதிலின்கட்கதவைக் குத்திக் கயிற்றாற் பிணித்தலைச்செய்தகவிழ்ந்த மணியையணிந்த பக்கத்தையும் பெருங்கையையுமுடையயானையினது பெரிய கழுத்திடத்தே யிருந்து பரிகாரமில்லாதகூற்றத்தினது பொறுத்தற்கரிய கொலைத்தொழிலுக்குஇளையாத வலிய கையின் கண்ணே ஒள்ளிய வாளினையுடையபெரும்பெயர்வழுதி! நிலம் பிறழினும் நினது ஆணையாகியசொற் பிறழாதொழியல்வேண்டும்; பொன்னாற் செய்யப்பட்டவீரக்கழல் புனைந்தகாலினையும் பூசிப்புலர்ந்த சந்தனத்தையுடைத்தாகியகுறுக்ககன்ற பரந்த மார்பினையு முடையோய்! ஊரில்லாதனவும்,பொறுத்தற்கரிய உயங்குதலையுடையனவும், நீரில்லாதனவும்,நீண்ட வழியனவுமாகிய, வலம்பலரை நலியச் சேய்மைக்கண்ணே பார்த்திருக்கும் இருப்பினையும், கையாற்கவிக்கப்பட்டகண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும், செவ்வியதொடை பிழையாத தறுகண்மையையுமுடைய மறவர்தாம் அம்பைவிடுதலாற் பட்டோரது உடன்மூடிய புதியகற்குவையின்மேலேதிருந்திய சிறகினையும் வளைந்த வாயினையுமுடையபருந்திருந்து வருந்தும் உன்னமரத்தினையுடையவாகியஅணுகுதற்கரிய கவர்த்த வழியின்கண்ணே நின்பால்நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அங்ஙனம்வருவது, அவர் மனக்குறிப்பை அவர் முகத்தானறிந்துஅவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான் -எ - று.