Purananuru 3.p32
Puṟanāṉūṟu paḻaiya urai 3.p32
- Language
- Tamil
3.p32
23. உன்னம் - போர் செய்தற்குச் செல்வோர்நிமித்தம் பார்த்தற்குரிய ஒருவகை மரம்; புன்காலுன்னஞ் சாய” (பதிற். 40 : 17) என்பதும், ‘தன்னொடுபொரக்கருதுவார் நிமித்தம் பார்த்தவழி அவர்க்குவென்றியின்மையிற் கரிந்து காட்ட’ என்னும் அதன்உரையும், “புன்காலுன்னத்துப் பகைவன்” (பதிற்.61 : 6) என்பதும், “துன்னருந்தானைத் தொடுகழலான்றுப்பெதிர்ந்து, முன்னர் வணங்கார் முரண்மருங்க மன்னரு,மீடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின், கோடெலாமுன்னங்குழை” (பு - வெ. 243) என்பதும் இங்கே அறியற்பாலன.உன்னம் - இலவமரமென்பது மலைநாட்டு வழக்கென்பர்.